Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 16.1 சதவீதம் சரிவு

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 16.1 சதவீதம் சரிவு

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரவுகளின்படி, திருச்சி விமான நிலையத்தில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,97,767 பயணிகள் கையாளப்பட்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 16.1 சதவீதம் குறைந்துள்ளது. ஓராண்டில் 31,788 பயணிகள் குறைந்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் புதிய வழித்தடங்களை மேம்படுத்துவதுவது அவசியம் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரவுகளின்படி, திருச்சி விமான நிலையத்தில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,97,767 பயணிகள் கையாளப்பட்டனர். ஆனால், 2026 ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,65,979-ஆக குறைந்துள்ளது. ஓராண்டில் பயணிகள் எண்ணிக்கை 31,788 குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 16.1 சதவீத சரிவாகும்.

சர்வதேச விமானப் போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள திருச்சி விமான நிலையத்தில் இந்த மாற்றம் கவனத்தைப் பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் புவனேஸ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி விமான நிலையம் மத்திய மற்றும் தென் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கும் முக்கியமான போக்குவரத்து மையமாக விளங்குகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகள் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

இந்நிலையில், பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவைத் தொடர்ந்து, விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல், ஏற்கெனவே செயல்படும் வழித்தடங்களில் பயணிகள் தேவைக்கு ஏற்ப சேவைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும், விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதுடன், சுற்றுலா, தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும் விமானப் போக்குவரத்துக்கான தேவையை அதிகரிக்க முடியும்.

திருச்சி விமான நிலையம் உட்பட 11 விமான நிலையங்களைத் தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கான ஏல நடைமுறைகளை டிசம்பரில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விமான நிலையத்தின் வணிக வளர்ச்சி மற்றும் பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம். 

எனினும், தனியார் பங்களிப்புத் திட்டத்துக்கும் பயணிகள் எண்ணிக்கை உயர்வுக்கும் இடையிலான தொடர்பு, மேற்கொள்ளப்படும் முதலீடுகள், விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பயணிகள் தேவையைப் பொறுத்தே அமையும்.

முந்தைய செய்தி
ரூ.112.95 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
அடுத்த செய்தி
பருத்தி விலை கேண்டிக்கு ரூ.4,000 உயர்வு; நூற்பாலைகளுக்கு சிக்கல்

தொடர்புடைய செய்திகள்